The coordinators of the Jato Jio Organization said that their struggle will continue and will be legally valid.
தங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும் எனவும் சட்டப்படி சந்திப்போம் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வழக்கறிஞர் சேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செப். 14 ஆம் தேதி க்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு நீதிபதி கிருபாகரன் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அரசு ஊழியர்களின் போரட்டத்திற்கு அரசு இடம் தரக்கூடாது என அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அப்புறப்படுத்தும் பணியிலும் கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும் எனவும் சட்டப்படி சந்திப்போம் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், செப். 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
