Tamilnadu Rains: மக்களே உஷார்.. சென்னையில் வெளுத்து வாங்கப் போகுது மழை.. எப்போ தெரியுமா ?
தமிழ்நாட்டில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஜனவரி 30 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் ட்விட்டரில் வானிலை குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனவரி 31 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 முதல் 5 நாட்களுக்கு சற்று குளிர் அதிகமாக காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்கள் முதல் தூத்துக்குடி வரை சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்றும், அது தவிர தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.