Asianet News TamilAsianet News Tamil

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு – கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன்

the cbi summons karti chidambaram to be aircel case
the cbi summons karti chidambaram to be aircel case
Author
First Published Sep 27, 2017, 9:59 PM IST


ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து 2011 ஏப்ரலில் சிவசங்கரன் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க சி.பி.ஐ சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை அடுத்து கார்த்தி சிதம்பரத்தின் மொத்த சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முன்தினம் முடக்கியது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios