The CBI has been ordered to postpone the case till tomorrow the CBI has said that it would not allow him to go abroad for Karthi Chidambaram.

கார்த்தி சிதம்பரத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்ககூடாது என சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. 

இதற்கான விசாரணைக்கு அழைத்தும் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. இதனால் தேடப்படும் நபர் என்ற லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது சிபிஐ. 

இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை பெற்றார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது சரிதான் என்றும் லுக்அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், அக்.19-நவ.13-ம் தேதி வரை இங்கிலாந்து செல்ல கார்த்தி சிதம்பரம் அனுமதி கோரியுள்ளார். 

வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மகளை சேர்க்க உள்ளதால் இங்கிலாந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாடு செல்ல அனுமதி அளிக்ககூடாது என சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து நாளை வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.