The burgers who snatched the golden dish in the neck of Amman at midnight Police investigation ...

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கோவிலின் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலியை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது கோனேரிப்பள்ளி. இந்தப் பகுதியில் வேணுகோபால சுவாமி கோயில் ஒன்று உள்ளது.

இந்தக் கோயில் பூசாரியாக அதேப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

மறுநாள் காலை கோயிலுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

நள்ளிரவில் கோயிலின் கதவை மர்ம நபர்கள் கடப்பாரையால் உடைத்துள்ளதை அறிந்து உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்கத் தாலியை காணாவில்லை.

அம்மன் கழுத்தில் இருந்த தாலியை மர்ம நபர்கள் திருடிவிட்டனர் என்று பூசாரி ஆனந்தன சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்ன்

அந்த புகாரின்பேரில் சூளகிரி காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.