லஞ்சம் பெற்ற புகாரில் மத்திய வேளாண் துறை இயக்குனர் உள்பட  3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

விமான நிலையத்தில் ஏற்றப்படும் பழங்கள், காய்கறிகள், உணவுபொருட்களை சோதிக்கும் பணியில் மத்திய வேளாண்துறை இயக்குனரகம் கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் தொற்று தடுப்பின் மண்டல் இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கான அலுவலகம் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் முகவர்களிடம் வேளாண்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் வந்தது.

இதையடுத்து சென்னை மத்திய வேளாண் துறை இயக்குனர் மாணிக்கத்தை சென்னை விமானநிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவரிடம் இருந்து லஞ்ச பணம் 7.10 லட்சப் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் அந்த துறையை சேர்ந்த ஏழு அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால் அவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கில் மத்திய வேளாண் துறை இயக்குனர் மாணிக்கம், சத்தியநாராயணா, மகாராஜன் ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர்.