குடியரசு தலைவர் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் டெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது. தேர்தல் பெட்டிகளுடன் தேர்தல் பார்வையாளர் அன்சு பிரகாஷ், சட்டப்பேரவை செயலாளர் பூபதி ஆகியோர் செல்கின்றனர்.

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. அனைத்து மாநிலத்திலும், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலாவதாக தனது வாக்கைப் பதிவு செய்தார்.

முதலமைச்சரைத் தொடரந்து சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர்.

மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில்,  குடியரசு தலைவர் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் தலைமை செயலகத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது. தேர்தல் பெட்டிகளுடன் தேர்தல் பார்வையாளர் அன்சு பிரகாஷ், சட்டப்பேரவை செயலாளர் பூபதி ஆகியோர் செல்கின்றனர்.