thanjore goverment school give 1gram gold coin for all students
கல்வியின் முக்கியத்துவம் அதிகரிக்க அதிகரிக்க, குழந்தைகளின் கல்வியை காட்டி பல தனியார் பள்ளிகள், கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள பேராவூரணி தாலுகா தமிழ்நாடு அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு... 1கிராம் தங்க நாணயம் மற்றும் பெற்றோருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகையும் கொடுக்கின்றனர் கிராம நிர்வாகிகள்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி கணக்கு அந்த பள்ளியில் படிக்கும் மொத்த மாணவர்களை கணக்கு எடுக்கையில், 80 திற்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படித்து வருவது தெரியவந்தது.
இதனால் அந்த கிராம மக்களுடன் கிராம அதிகாரிகள் பேசி ஒரு முடிவு செய்துள்ளனர். அதன் படி, 1 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் 1 கிராம் தங்க நாணயம் மற்றும் குழந்தைகளின் பெற்றோருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது 15 மாணவர்கள் புதிதாக இணைந்துள்ளதாகவும், விரைவில் 50 மாணவர்களாவது சேர்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக கிராம அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் கல்வியை கருதி இந்த கிராம மக்கள் மற்றும் கிராம அதிகாரிகள் எடுத்து வரும் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
