''உங்களுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தளராத உறுதி ஆகியவற்றால் திரையுலகில் உச்சாணிக் கொம்பை எட்டிய போதிலும், மக்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அரசியலில் தடம் பதித்தீர்கள்'' என்று சிபி சத்யராஜ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வரலாறு காணாத மாற்றம் நிகழ்ந்துள்ளது. கட்சி ஆரம்பித்து வெறும் மூன்றே ஆண்டுகளில் நடிகர் விஜய்யின் தவெக ஆட்சி செய்யப்போகிறது. விஜய் முதல்வராக பொறுப்பேற்க போகிறார். இதுவரை 108 தொகுதிகளை பெற்றுள்ள தவெக கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது. தமிழக அரசியலில் புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு பெரும் வரலாறு படைத்த விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் சரித்திரம் படைத்த விஜய்

இந்த நிலையில், தமிழகத்தில் புதிய சரித்திரம் படைத்துள்ள விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துகள் என்று திமுக ஆதரவாளரான சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

"கூட்டம் ஒட்டா மாறாது"

-மாறிடுச்சு!

"ஒட்டு சீட்டா மாறாது "

-மாறிடுச்சு!

“நடிகன் நாடாள முடியாது"

-ஆளப்போகிறார்

"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் "

-வாய்ப்பில்லை ராஜா

"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?"

-பாக்க தானே போறீங்க

"விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”..

-எவராலும் விஜய் ஆக முடியாது!

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம்

அன்பு அண்ணன் @actorvijay அவர்களுக்கு,

"உங்களுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தளராத உறுதி ஆகியவற்றால் திரையுலகில் உச்சாணிக் கொம்பை எட்டிய போதிலும், மக்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அரசியலில் தடம் பதித்தீர்கள். இன்று அதே பண்புகளோடும், மக்களுக்குத் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற தூய எண்ணத்தோடும் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளீர்கள்!

கூட்டணி குறித்த உங்கள் முடிவில் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் எதிர்கொண்ட அடுக்கடுக்கான சவால்களுக்கு மத்தியிலும் உங்கள் நிலைப்பாட்டில் இருந்து நீங்கள் இம்மியளவும் பின்வாங்கவில்லை.

Scroll to load tweet…

விமர்சனங்களுக்கு பதிலடி

அண்ணா, திரையில் நீங்கள் பல வில்லன்களைத் துவம்சம் செய்வதைப் பார்த்து நாங்கள் விசில் அடித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் இன்று, அதே அதிரடியை அரசியலிலும் நிஜமாக்கிக் காட்டிவிட்டீர்கள்! உங்கள் மீது விமர்சனங்களை அள்ளி வீசியவர்களின் வாய்களை, உங்கள் டிரேட்மார்க் பாணியிலேயே மௌனமாக்கி, உங்கள் ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளீர்கள். இறுதியாக, மக்கள் 'பணத்திற்காக' அல்ல, 'உண்மைக்காக' தான் வாக்களிப்பார்கள் என்பதை நிரூபித்து தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.