Asianet News TamilAsianet News Tamil

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. கொழுந்து விட்டு எரிந்த தீ.. அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்பு வீரர்கள்

பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 

Terrible fire accident at Poonamallee factory
Author
Poonamallee, First Published Jun 26, 2022, 2:38 PM IST

சென்னை, பூந்தமல்லி அருகே காடுப்பாக்கத்திலுள்ள ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் மெட்ரோ ரயில் பணிக்கான இரும்பு தகடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தினால், தொழிற்சாலையின் சேமிப்பு கிடங்கில் உள்ள பெயிண்ட், மரக்கட்டைகள், ரசாயணங்களில் தீ பரவியதை அடுத்து மளமளவென எரிய தொடங்கியது. இதனால் இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. 

மேலும் படிக்க:”அக்னிபத்” எதிராக பாஜக வை எதிர்க்கும் திமுக செய்வது மட்டும் நியாயமா..? போட்டு பொளந்த சீமான்..

இதனையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு  உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பயங்கரமாக எரிந்து வருவதால் விரர்கள் அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர். மேலும் தீயைக் கட்டுபடுத்தம் கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனிடையே தொழிற்சாலையில் சேமிப்பு கிடங்கு பகுதியில் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், மற்ற பகுதிகளில் தீ பரவாமல் வீரர்கள் கட்டுபடுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க:தொண்டர்கள் என்னுடன் தான் உள்ளனர்..! இபிஎஸ் அணிக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை திடீரென தொழிற்சாலையின் கிழக்குப் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios