Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ள 10 பேரூராட்சிகள்… எவை எவை தெரியுமா?

தமிழகத்தில் 10 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ten town panchayats are being upgraded to municipalities in tamilnadu
Author
First Published Mar 28, 2023, 10:37 PM IST

தமிழகத்தில் 10 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 10 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 17 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லஞ்சம்; ஓய்வு பெற்ற ஆய்வாளருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை, திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி, உதகை மாவட்டத்தின் கோத்தகிரி, நெல்லை மாவட்டத்தில் வடக்கு வள்ளியூர், சங்கர் நகர், நாராணம்மாள்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் என 10 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கோவை இளைஞருக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டு கடுங்காவல் சிறை

அவ்வாறு உயர்த்தப்பட்டால் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களின் கீழ், சாலைகள், குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய், திடக்கழிவு மேலாண் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். கடந்த ஆண்டு பல நகராட்சிகள், மாநகராட்சிகளாகவும், 29 பேரூராட்சிகள், நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios