temple wall collapsed in thiruvannamalai today

திருவண்ணாமலை கோவில் கிரிவல பாதையில்,நடைபெற்று வந்த விரிவாக்க பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததால்,ஒரு நபர் பலியானார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை அகலப்படுத்தும் பணிக்காக கால்வாய் தோண்டும் போது ரமண மகரிஷி ஆசிர சுற்றுச்சுவர் இடிந்து விழந்ததில் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ஒருவர் பலி, 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரு கூலித் தொழிலாளி சுவர் அடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுஇ றது இதையடுத்து JCB இயந்திரம் மூலம் தோண்டும் பணி நடந்து வருகிறது

இதனை தொடர்ந்து தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெறு வருகிறது

இதற்கு முன்னதாக நேற்று, திருச்செந்தூர் முருகன்கோயிலில் உள்ள பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியதால், அவர்களை மீட்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த பிரகார மண்டபம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ளது. இந்த பிரகார மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருவண்ணமலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால் மக்கள் ஒருவித மான அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர் 

காரணம் நேற்று திருச்செந்தூர்....இன்று திருவண்ணாமலை..ஊர் பெயரும் தி.. தி என எதார்த்தமாக அமைந்துள்ளது