Technical Assistants should have equal pay for state sector - Power Board Engineers

இராமநாதபுரம்

தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு அரசுத்துறைக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் சார்பில் இராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு நுழைவு வாயிற்கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் சார்பில் மின்வாரியத்தால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து விநியோக பிரிவுகளுக்கும் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பதவி,

தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு அரசுத்துறைக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,

தொழில்நுட்ப உதவியாளர், சிவில் பதவிகள், இளநிலை பொறியாளர் பதவிகள் உருவாக்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்த்து உடனடியாக உருவாக்க வேண்டும்,

அத்தியாவசிய தளவாட பொருட்கள் தடையின்றி வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு நுழைவு வாயிற்கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கவன ஈர்ப்பு நுழைவு வாயிற்கூட்டத்திற்கு கிளைத் தலைவர் ஜோசப் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர் சிக்கந்தர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கங்காதரன் வரவேற்றுப் பேசினார்.

இதில், பொருளாளர் பழனிச்சாமி, கிளை தலைவர் சிராஜுதீன், துணை செயலாளர் மலைச்சாமி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.