வேலூர்

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டடத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர்கள் அங்கிருந்து பல்வேறு அரசு கலைக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

இதனால் கௌரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை திரும்ப பெறக்கோரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு கௌரவ விரிவுரையாளர்கள் நலச் சங்க வேலூர் கிளை தலைவர் அருண்கார்த்தி தலைமை வகித்தார்.

செயலாளர் நரேந்திரன், பொருளாளர் எம்.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்து பணிபாதுகாப்பு வழங்க வேண்டும்.

ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்,

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை திரும்ப பெற வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், முழக்கமிட்டனர்.