டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதேபோல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்ரவரி இரண்டு மற்றும் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2,407 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பட்டப் படிப்புடன் பி.எட்., முடிக்கும் பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற, தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால், அது வாழ்நாள் முழுதும் செல்லத்தக்க சான்றிதழாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான டெட் தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதன்படி, நாளை முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். தேர்வுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போன்றவற்றை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
