Asianet News TamilAsianet News Tamil

குடிமகன்கள் அதிர்ச்சி... தமிழகத்தில் இத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறதா?

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு மட்டும் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, 7,896 இருந்து 5,198-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

TASMAC shop 2698 close
Author
Tamil Nadu, First Published Feb 8, 2019, 12:16 PM IST

தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

2019-20ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தாக்கல் செய்யப்பட்டு நிதியமைச்சர் ஓபிஎஸ் உரையாற்றி வருகிறார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என ஜெயலிலதா வாக்குறுதி அளித்திருந்தார்.

TASMAC shop 2698 close

இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு மட்டும் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, 7,896 இருந்து 5,198-ஆக குறைக்கப்பட்டுள்ளது.  TASMAC shop 2698 close

2019-200ம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.7,262.33 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். 2018-19-ம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் வருவாய்  ரூ.6 ஆயிரத்து 724.38 கோடியாக இருந்ததாக பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios