தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஆடிப்போய் இருக்கும் விவகாரம் 1000 மற்றும் 500 ரூபாய் செல்லாத விவகாரம். இதில் பாதிக்கப்படாதவர்கள் இன்று பிறந்த குழந்தையும் , இறந்து போன பிணமும் மட்டும் தான் அந்த அளவுக்கு அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கையும், காற்றையும் போல் பிரச்சனை அனைத்து தரப்பு மக்களையும் துரத்துகிறது.

இதில் குடிமகன்கள் மட்டும் விலக்கா என்ன. டாஸ்மாக் குடிமகன்களின் குறைதீர்க்கும் அட்சயபாத்திரம். சில்லறை எங்குமே கிடைக்கவில்லையா டாஸ்மாக்கில் கேளுங்கள் என்று கூறும் அளவுக்கு 100 , 50, 20, 10 ரூபாய் தாள்கள் அதிகம் புழங்கும் இடம். காரணம் வாடிக்கையாளர்கள் அனிவரும் உழைப்பாளி மக்களே.

செல்லாத நோட்டு விவகாரம் அவர்களை மட்டும் பாதிக்காதா என்ன உழைப்பவனுக்கு 100 , 200 கிடைக்காத நிலையில் அதை கொண்டு போய் டாஸ்மாக்கில் கொடுக்க அவனுக்கு பைத்தியமா என்ன. 

1000 , 500 க்கு மொத்தமா வாங்கி குடிப்பவனும் ரூபாய் நோட்டுகள் செல்லாததால் டாஸ்மாக் பக்கமே தலைவைத்து படுக்கவில்லை. விளைவு கடந்த மூன்று நாளில் மட்டும் 40 கோடி ரூபாய் நஷ்டமாம். நஷ்டம் 40 கோடி என்றால் விற்பனை அதைவிட பல மடங்கு பாதிக்கப்பட்டு இருக்குமே.