tanker lorry caught fire in soolagiri road

சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரியும் டேங்கர் லாரி..! சாலையை கடக்க முடியாமல் அவதி.! 

சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால், நெடுஞ்சாலையில் பின்னால் வரும் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். 

ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு ஏற்றி வந்த லாரி நடுவழியில் திடிரென தீ பற்றி எரிந்து கொண்டு உள்ளதால், எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது.