Tamils like Kummayam Chaini Pingki Kichichichchat Thamadam are to be introduced in schools ...

திருப்பூர்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மறைந்து வரும் கும்மாயம், சங்கிலி புங்கிலி, கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் போன்ற தமிழர் விளையாட்டுகளை பள்ளிகளில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர் கோவை சதாசிவம் கேட்டுக் கொண்டார்.

திருப்பூரில் பதியம் இலக்கிய அமைப்புச் சார்பில் நூல்கள் அறிமுக விழா நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு பதியம் இலக்கிய அமைப்பின் அமைப்பாளர் பாரதிவாசன் தலைமை தாங்கினார். நேர்மை மக்கள் அமைப்பின் தலைவர் பழ.ரகுபதி முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில், கேரள மாநிலம், மறையூரில் உள்ள தமிழ் வழி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும், கவிஞருமான எஸ்.டி.ராஜ் எழுதிய 'நானில்லாத என் முகம்' என்ற கவிதை நூலை கவிஞர் துருவன் பாலாவும் அறிமுகப்படுத்திப் பேசினார்.

பின்னர், இ.பா.சிந்தனின் 'பாலஸ்தீனம் வரலாறும், சினிமாவும்' என்ற நூலை நாவலாசிரியர் சம்சுதீன் ஹீரா அறிமுகப்படுத்திப் பேசினார்.

அதன் பின்னர், சூழலியல் ஆர்வலர் கோவை சதாசிவத்தின் 'சில்லுக்கோடு' என்ற நூலை கவிஞர் பாண்டிச்செல்வமும் அறிமுகப்படுத்திப் பேசினார்.

இதில், அழிந்துவரும் தமிழர்களின் விளையாட்டுகள் குறித்து எழுதப்பட்ட சில்லுக்கோடு நூலின் ஆசிரியரும், சூழலியல் ஆர்வலருமான கோவை சதாசிவம் பேசியது:

“தமிழர்களின் விளையாட்டு என்பது ஒரு செழுமையான பண்பாடு கொண்டதாகும். இனத்தின் பண்பாட்டு வழியில் தோன்றியவை நமது விளையாட்டுகள் ஆகும்.

கும்மாயம், சங்கிலி புங்கிலி, கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் உள்ளிட்ட விளையாட்டுகள் முல்லை நிலமக்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தமிழர்களின் விளையாட்டுகளை குழந்தைகளுக்குப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, கவிஞர்கள் ஜோதி, கனல், அருணாசலம், மோகனராசு, தமிழ்பாரதி, அறிவு, சுவேதா, கௌதம்ராஜ் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.