தமிழ் சினிமாவை கிண்டலடித்து எடுக்கப்பட்ட முழுநீள காமெடி திரைப்படம்தான் தமிழ்ப்படம். 2010 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தில், சிவா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தமிழ்ப்படம் 2.0 உருவாகி வருகிறது.

முதல் பாகத்தில் நடிக்க சிவா, திஷா பாண்டே ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கின்றனர். மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். இரண்டாம் பாகத்தை சி.எஸ்.அமுதன் இயக்க, ஆர்.கண்ணன்  இசையமைக்கிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார்.

இந்த நிலையில், 2.0 படத்தில் ரொமாண்டிக் சிங்கிள் டிராக் பாடல் ஒன்று மகளிர் தினதத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 'எவடா உன்ன பெத்தான்' என்ற வரிகளில் தொடங்கும் பாடல் ஒன்றை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப் பாடலை நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகமும் தமிழல் வெளியான படங்களின் காட்சிகளை கிண்டலடித்து உருவாக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சிம்பு நடித்து வெளியான வானம் படத்தில், எவன்டி உன்ன பெத்தான்... கையில கெடச்சா செத்தா என்ற பாடலைப் போன்று அதே பாணியில் பெண் ஒருவர் ஆண் நண்பரைப் பார்த்து பாடுவதுபோல் எவடா உன்னப் பெத்தான் என்ற வரிகளில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலின் இடையிடையே சிம்புவின் பீப் பாடல்களில் இடம் பெறும் வரிகளை கிண்டலடிக்கும் விதமாக இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடல் வலைத்தளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.