12 மணிநேர வேலை மசோதாவை எதிர்த்து ஸ்ட்ரைக்! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
12 மணிநேரம் பணிபுரிவது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை எதிர்த்து ஒன்பது தொழிற்சங்கங்கள் வரும் மே 12ஆம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
12 மணிநேரம் பணிபுரிவது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை எதிர்த்து ஒன்பது தொழிற்சங்கங்கள் வரும் மே 12ஆம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
தொழிலாளர்கள் ஒரு நாளில் 12 மணிநேரம் வேலை செய்வது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. பல தொழிற்சங்கங்களும் இந்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த மசோதாவை தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் 12 மணிநேர வேலை மசோதா குறித்து 9 தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் மசோதாவை எதிர்த்து வரும் மே 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
CITU, AITUC, HMS உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன. ஏப்ரல் 27ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் நடைபெறும் மே 12ஆம் நாளில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி அமைச்சர்களைச் சந்தித்தும் தெரிவிக்க இருப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
ஜப்பான், சிங்கப்பூருக்கு பறக்க திட்டமிடும் மு.க.ஸ்டாலின்.? வெளிநாடு முதலீடுகள் ஈர்க்க திட்டம்