தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. 

இதே போன்று வெதர் மேன் தெரித்துள்ள தகவல் படி மன்னார் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மெல்ல மெல்ல தென் தமிழகம் நோக்கி வருவதால் தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை கன மழை பெய்யும் என்றும் அதுக்கு அடுத்து வரும் நாட்களில் மெல்ல மெல்ல மழை குறையும் என்றும் தெரிவித்துள்ளார். 

சென்னையை பொறுத்தவரை இரவு நேரம் மற்றும் காலை நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் பகல் நேரத்தில் மிதமான வெயில் அடிக்கும் நிலை உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார் வெதர்மேன் போலீஸ்!