Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்...! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை...!

TamilNadu Weatherman alert
TamilNadu Weatherman alert
Author
First Published Mar 26, 2018, 6:34 PM IST


சென்னையில் வரும் 28 ஆம் தேதியில் இருந்து வெயில் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

TamilNadu Weatherman alert

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் வானிலை குறித்து அவ்வப்போது பதிவிட்ட வருகிறார். அவரது பதிவுகளை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரதீப் ஜான், வரும் 28 ஆம் தேதியில் இருந்து சென்னையில் வெயில் அதிகமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

அவரது பேஸ்புக் பக்கத்தில், சென்னையில் வரும் 28 ஆம் தேதியில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரிக்கும். நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

TamilNadu Weatherman alert

குறிப்பாக மற்ற 4 மாவட்டங்களைக் காட்டிலும், தூத்துக்குடியில் மழை நன்கு பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த மழை பின் இரவிலோ அல்லது நாளை காலையிலோ பெய்யலாம். இந்த மழை விட்டுவிட்டு பெய்யக்கூடும். அதேசமயம், அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

கிழக்கில் கடற்கரைப்பகுதியில் இருந்து சென்னை சுற்றுப்புற பகுதிக்கு இதமான காற்று வந்ததால், வெயிலின் தாக்கம் தெரியாமல் இருந்து வந்தது. இதனால், 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பம் இருந்தது. வழக்கமாக 34.5 டிகிரி செல்சியஸ் இருக்கும் ஆனால், இந்த இதமான காற்று காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்தது.

TamilNadu Weatherman alert

ஆனால், வரும் 28 மற்றும் 29 ஆம் தேதி முதல் வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவும் அழுத்தம் காரணமாக, நிலத்தில் இருந்து வீசும் காற்று வலுப்பெறும். இதனால், கிழக்குப்பகுதியில் இருந்து நிலப்பகுதி நோக்கி வீசும் காற்று தடுக்கப்படுவதால் வெப்பம்  அதிகரிக்கும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை கடந்து செல்லும் அளவுக்கு வெயில் இருக்கும் என்று பிரதீப் ஜான், பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios