தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கோடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில தென் கடலோர பகுதிகளில் மழை பெய்தும் வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்றும் நாளையும் (11-06-2022 - 12-06-2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன், 13, 14 மற்றும் 15ம் தேதிகளிக், தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

முழு சார்ஜ் செய்தால் 132 கி.மீ. ரேன்ஜ்.. அதிரடி அம்சங்களுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்...!

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் 6 செ.மீ., பொன்னமராவதி செ.மீ., கள்ளிக்குடி, சோலையார், திருமங்கலம், கோத்தகிரி, மதுரை விமானநிலையம், காரையூர், சிவலோகம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ., அறந்தாங்கி, உதகை, மருங்காபுரி, சித்தார், பேச்சிப்பாறை, நாகுடி, குடுமியான்மலை ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ., குன்னூர், தக்கலை, அன்னவாசல், புதுக்கோட்டை, மேட்டுபட்டி, வால்பாறை, குளச்சல், சின்கோனா, ஆயிக்குடி, வம்பன் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ., மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Ration Shop : குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! இனி கவலையில்லை மக்களே !!