சேலம்
 
கூட்டுறவு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. "இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடும் கூட்டுறவு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், 

கூட்டுறவுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய நாட்டாண்மை கட்டிட வளாகத்திற்குள் நேற்று மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சங்க மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஏராளமானோர் வந்தனர். 

இதனையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய நாட்டாண்மை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். 

இதுபற்றி தகவலறிந்த நகர காவலாளர்கள் உடனடியாக அங்கு வந்து சங்க நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.  பின்னர், அவர்கள் கூட்டுறவு தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.