- Home
- Tamil Nadu News
- மோடி மேடையில் பிரேமலதா.. இறுதிக்கட்ட பேரத்தை முடித்த அதிமுக..! இத்தனை சீட்டுகளா..?
மோடி மேடையில் பிரேமலதா.. இறுதிக்கட்ட பேரத்தை முடித்த அதிமுக..! இத்தனை சீட்டுகளா..?
இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் எங்களால் பொறுமை காக்க முடியாது என ரொம்ப கடுமையாவே பேசி இருக்கிறார்கள். இரண்டு நாள் கால அவகாசமும் கொடுத்த நிலையில் இப்போது பிரேமலதா தன்னுடைய இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார்.

குழப்ப நிலையில் பிரேமலதா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் கூட்டணி வைத்தபோது ஆறு சதவீதத்திற்கும் மேல் தேமுதிக வாக்குகளை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது தேமுதிகவின் வாக்கு வாங்கி ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஆனாலும், விஜயகாந்த மரணத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் தேமுதிக மீதும் ஒருவித அனுதாப அலை வீசுகிறது. இதற்கிடையே கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டை பிரேமலதா விஜயகாந்த் மிக பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார்.
அந்த மாநாட்டில் ஒரு லட்சம் பேருக்கும் மேலானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அதிமுக- திமுக -தவெக என மூன்று கட்சிகளிடமும் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி பற்றி பேசி வந்தார். தவெகவுடன் பிரேம்லதா விஜய்காந்த் கேட்கக்கூடிய தொகுதிகளை ஒதுக்கி தருவதாகவும், அமைச்சரவையில் பங்கு தருவதாகவும், தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் தவெகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் ஒருவிதமான குழப்பு நிலை தான் இருக்கிறார்.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை
தவெகவுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தால் ஒருவேளை வெற்றி பெற வாய்ப்பு இருக்கும். வெற்றி பெறும் கூட்டணியில் தான் இடம்பெற வேண்டும் என்பதில் முடிவோடு இருந்தார் பிரேமலதா. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை எனத் தெரிய வந்துள்ளது. திமுக தரப்பிலும் பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால், திமுக தரப்பில் ஏழு தொகுதிகள் மட்டும்தான் ஒதுக்கி தர முடியும். தேர்தல் செலவுகளுக்கு பாதி பணம் மட்டுமே தர முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தேமுதிக தரப்பிலோ திமுகவிடம் 21 தொகுதிகள் ஒதுக்கி, ஒரு ராஜ்யசபா பதவி தர வேண்டும். திமுக வேட்பாளர்களுக்கு இணையான தேர்தல் செலவுக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவகாசம் கொடுத்த அதிமுக
ஆனால், அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 10 தொகுதிகள் மட்டும்தான் ஒதுக்கி தர முடியும். ராஜ்யசபா பதவி இப்போது கொடுக்க முடியாது. அதை ஏற்கனவே அன்புமணி தரப்பில் பேசி முடிக்கப்பட்டு விட்டது. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ராஜ்யசபா சீட்டை கேட்டுள்ளது. ஆகையால், தேர்தல் செலவுக்கு முழு அளவிலான பணத்தை ஏற்பாடும் செய்து தருகிறோம் எனக் கூறியுள்ளனர். ஆனாலும், பிரேம்லதா கூட்டணியை உறுதி செய்யாமல் நீடித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரேமலதா விஜயகாந்திடம் சீக்கிரமாக பேசி முடியுங்கள். இழுத்துக் கொண்டே போகாதீங்க. நீங்க சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் மாற்று முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்.
இறுதி முடிவெடுத்த பிரேமலதா
அதனால், இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் எங்களால் பொறுமை காக்க முடியாது என ரொம்ப கடுமையாவே பேசி இருக்கிறார்கள். இரண்டு நாள் கால அவகாசமும் கொடுத்த நிலையில் இப்போது பிரேமலதா தன்னுடைய இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார். எது எப்படி இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
