பணியின் போது செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கீழ் உள்ளவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என சுற்றிக்கை அனுப்பியிருந்தார். பாதுகாப்பு பணியில் இருக்கும் போது சமூக வலைதளங்களில் நேரங்களை செலவிடுவதாகவும் இதனால் பணியின் போது கவனத்தை தவிர விடுவதாகவும் எச்சரித்து ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார். ஆனால் அந்த சுற்றறிக்கை முறையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது போக்குவரத்து காவலர்கள் பெரும்பாலனோர் செல்போன்களை பார்த்துக்கொண்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்யாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அரசு வழக்கறிஞரிடம் முறையிட்டு தொடர்ந்து இதுபோல போக்குவரத்து காவலர் செயல்படுவதாகவும், பல்வேறு விதிமீறல் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.  

இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் டிஜிபியிடம் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் தமிழக டிஜிபி ஏற்கனவே நம்பவர் 17-ம் வெளியிட்ட அந்த சுற்றறிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளார். 

இதில் உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். போக்குவரத்து, விஐபி பாதுகாப்பு, திருவிழா நிகழ்வுக்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளருக்கு கீழ் பதவியில் உள்ள காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என டிஜிபி ராஜேந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.