வீட்டு வசதி வாரியத்தின், கோயம்பேடு, மதுராந்தகம் திட்ட பகுதிகளில், கட்டப்பட்டுள்ள வீடுகளை ஒதுக்குவதற்கான குலுக்கல் வரும் 10, 11ம் தேதிகளில் நடக்கிறது. இது தொடர்பாக, வீட்டு வசதி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சென்னை, கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராம கோட்டத்தில், 136 வீடுகள் கட்டப்படுகின்றன. இதில், ஒதுக்கப்படாமல் உள்ள, 27 வீடுகளுக்கான ஒதுக்கீட்டாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான குலுக்கல், திருமங்கலத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும் 10ம் காலை 11 மணிக்கு நடைபெறும்.
இதேபோன்று, கே.கே., நகர் கோட்டத்துக்கு உட்பட்ட மதுராந்தகம் திட்டப் பகுதியில், சுய நிதி பிரிவில், 27 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. குறைந்த வருவாய் பிரிவினருக்கு இந்த வீடுகளை ஒதுக்க, அசோக் நகரில் உள்ள, கே.கே. நகர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், அதே நாள் 11 காலை, 11 மணிக்கு குலுக்கல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
