தொடங்கியது இடியுடன் கனமழை… புதுக்கோட்டையில் கஜாவின் கைவரிசை ஆரம்பம்

இன்று இரவு கஜா புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தற்போது புதுக்கோட்டையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Tamilnadu heavy rain

இன்று இரவு கஜா புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தற்போது புதுக்கோட்டையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

 Tamilnadu heavy rain

கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கஜா புயல் அதிதீவிர புயலாக மாறியது. சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. - நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. புயலின் வேகம் மணிக்கு 18 கிமீ இருந்து 17 கிமீ என குறைந்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாகவே வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. Tamilnadu heavy rain

மேலும், அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 936 அவசர கால ஊர்திகள், 41 இரு சக்கர ஊர்திகள் இயக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கஜா புயல் சீற்றம் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, புதுக்கோட்டையில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios