தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதால் கேரளாவில் மழை பெய்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய் யலாம். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். 

தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுவடைந்து கன்னியாகுமரிக்கும் கடலூருக்கும் இடையே நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் எந்த அளவுக்கு மழை இருக்கும். எந்த திசையை நோக்கி காற்றழுத்தம் நகரும் என்பன போன்ற விவரங்கள் வரும் 28ம் தேதி தெரியவரும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.