Asianet News TamilAsianet News Tamil

2024-ல் மொத்தம் 24 அரசு விடுமுறை நாட்கள்.. தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை பட்டியல் இதோ..

2024-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tamilnadu govt holidays 2024 announced here is the full list Rya
Author
First Published Oct 31, 2023, 2:38 PM IST

2023 முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ளன. 2024-ம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில் எத்தனை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அரசு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறைகள், பொது விடுமுறைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசு விடுமுறை என பல விடுமுறை நாட்கள் அடங்கும்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

2024 அரசு விடுமுறை நாட்கள்

ஜனவரி :  ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு (திங்கள்), ஜனவரி 15, தை பொங்கல், (திங்கள்) ஜனவரி16, மாட்டு பொங்கல்/திருவள்ளுவர் தினம் (செவ்வாய்), ஜனவரி 17 உழவர் திருநாள் (புதன்), ஜனவரி 25, (வியாழன்), ஜனவரி 26, குடியரசு தினம் ( வெள்ளி) ஜனவரி மாதத்தில் 6 பொது விடுமுறை நாட்கள் உள்ளன.

பிப்ரவரி : பிப்ரவரி மாதத்தில் எந்த அரசு விடுமுறை நாட்களும் இல்லை.

மார்ச் : மார்ச் 29 (வெள்ளி) புனித வெள்ளி என்பதால் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் : ஏப்ரல் 1 வங்கி (திங்கள்)ஆண்டுக்கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை), ஏப்ரல் 9 (செவ்வாய்) தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 11 (வியாழன்) ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 14 (ஞாயிறு) தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 21 (ஞாயிறு) மகாவீர் ஜெயந்தி ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்கள் ஆகும்.

மே : மே 1 ( புதன்) தொழிலாளர் தினம் விடுமுறை நாளாகும்.

ஜூன் : ஜூன் 17 (திங்கள்) பக்ரித் பண்டிகை என்பதால் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை : ஜூலை 17 (புதன்) மொஹரம் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை நாளாகும்.

ஆகஸ்ட் : ஆகஸ்ட் 15 (வியாழன்) சுதந்திர தினம், ஆகஸ்ட் 26, கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை விடுமுறை நாட்கள் ஆகும்.

செப்டம்பர் : செப்டம்பர் 17 (சனி) விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 16 (திங்கள்) மிலாடி நபி ஆகிய பொதுவிடுமுறை நாட்கள் உள்ளன.

 

இந்தியாவுக்கு தாய்லாந்து கொடுத்த தீபாவளிப் பரிசு! சுற்றுலா பயணத்துக்கு விசா தேவையில்லை!

அக்டோபர் : அக்டோபர் 2 (புதன்) காந்தி ஜெயந்தி, அக்டோபர் 11 (வெள்ளி) ஆயுத பூஜை, அக்டோபர் 12 (சனி) விஜய தசமி, அக்டோபர் 31 ( வியாழன்) தீபாவளி என 4 விடுமுறை நாட்கள் உள்ளன.

நவம்பர் : நவம்பர் மாதத்தில் எந்த அரசு விடுமுறை நாட்களும் இல்லை

டிசம்பர் : டிசம்பர் 25 (புதன்) கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை நாளாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios