மதுரை 

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் மதுரை அரசு மருத்துவமனை பிரதான நுழைவு வாயில் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் "மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். 

பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் செந்தில் தலைமை தாங்கினார். மதுரை மாவட்டச் செயலாளர் மருத்துவர் ரமேஷ், பொருளாளர் மருத்துவர் ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்று பேசினர். 

இந்த போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.