உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதால் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

7ஆம் ஆண்டு உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய அளவில் உடலுறுப்பு தானம் மற்றும் திசு மாற்று சிகிச்சையில் முதலிடம் பிடித்த தமிழகத்திற்கு மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த விருதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.