காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி ஐபிஎல் போட்டிக்கு எதிராக இன்று மாலை இயக்குனர் பாரதிராஜா தலைமையில் திரையுலக ஜாம்பவான்கள் தமிழத்திற்காக ஒரு கோடியை அறிமுகபடுத்தி அந்த தமிழ் கொடியை ஏந்தி அண்ணாசாலையில் போராடி வருகின்றனர்.

காவிரி நதிநீர் உரிமையை வென்றடுக்கும் வரை கேளிக்கைகள் வேண்டாம் என்ற முழக்கங்களுடன் ஐபிஎல் போட்டிக்கு எதிராக இன்று மாலை இயக்குனர் பாரதிராஜா தலைமையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் திரையுலகினர் நடக்கும் இந்த போராட்டம் தற்போது சென்னை அண்ணாசாலை, வாலாஜா சாலை சேப்பாக்கம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கனோர் அதிருகிறது.  

இந்நிலையில், திரையுலக பிரமுகர்கள தமிழ் கொடி ஒன்றை அறிமுகப்படுத்தி அதை ஏந்தி அண்ணாசாலையில் போராடினர். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா எங்களுடைய செயலை இன்று மாலை அண்ணாசாலையில் வந்து பாருங்கள் என போராட்டத்தை அறிவித்தார்.

கர்நாடாவிற்கு சிவப்பு, மஞ்சள் நிறத்தில் தனிக்கொடி வைத்துக்கொள்ள அம்மாநில அரசு முடிவு செய்து மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு தனிக்கொடி ஒன்றை உருவாக்கிபோராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த கொடி நீல வண்ணம் கொண்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் கொடிகளில் இடம்பெற்றுள்ளது, வில்-அம்பு, புலி, மீன் ஆகியவை இக்கொடியின் நடுவே உள்ளது. சிவப்பு வண்ணம் ஒன்று குறுக்கே செல்வதை போல இந்த கொடியில் அமைந்துள்ளது.