Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் போட்டியை காண அறிவிக்கப்பட்டுள்ள கெடுபிடிகள் இது தான்! அதிர்ச்சியில் ரசிகர்கள்...

Tamilnadu Cricket association imposes restriction on fans
Tamilnadu Cricket association imposes restriction on fans
Author
First Published Apr 10, 2018, 10:58 AM IST


இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைக் காண பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூறி தமிழகம் எங்கும் போராட்டம் வெடித்துள்ளதால் ஸ்தம்பித்துள்ளதால் நாடே கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tamilnadu Cricket association imposes restriction on fans

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடக்கவுள்ள நிலையில் போட்டியை நிறுத்தக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்தது. ஆனாலும் இந்த கோரிக்கைகளை கிரிக்கெட் சங்கம் ஏற்பதாக இல்லை.இதனையடுத்து இந்த போட்டியை காண பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளது;

Tamilnadu Cricket association imposes restriction on fans

#மைதானத்துக்கு செல்லும் ரசிகர்கள், செல்போன், தண்ணீர் பாட்டில், கொடி, பதாகைகள், பீடி, சிகரெட், கண்ணாடிகள் உள்ளிட்டவை எடுத்துச் செல்லக் கூடாது.

#இசைக்கருவிகள், கார் சாவி, பைனாகுலர், பட்டாசுகள், கேமரா, ரேடியோ, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#சந்தேகப்படுபவர்கள் மைதானத்தில் இருந்தால் அவர்களை பற்றி ரசிகர்கள் புகார் கொடுக்கலாம்

#கிரிக்கெட் போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் பல்வேறு சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர்.

Tamilnadu Cricket association imposes restriction on fans

#மைதானத்தில் எந்த பொருளையாவது வீசினால் அவர்கள் போலீஸில் ஒப்படைக்கப்படுவர்.

#ஸ்டேடியத்திற்குள் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லக் கூடாது.

#பேனர்களைக் கொண்டு செல்ல தடை.
எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள், வெளிஉணவு, தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டள்ளது.

Tamilnadu Cricket association imposes restriction on fans

ஐபிஎல் போட்டிகளை நடக்கவிடாமல் தடுப்போம் என்று அரசியல் கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios