தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி - நிதியமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த கே. அண்ணாமலை!

தமிழகம் முழுவதும் தனது பாதயாத்திரியை நடத்தி வரும் தமிழக பாஜக தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள், இன்று அக்டோபர் 3ம் தேதி டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

Tamilnadu BJP Leader K Annamalai met Finance Minister Nirmala Sitharaman in delhi ans

சில வாரங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மோடி அவர்களின் 9 ஆண்டுகால ஆட்சி சாதனைகளை தமிழகம் எங்கும் அறிவிக்கும் விதமாக, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் பாதயாத்திரை செல்ல முடிவு செய்தார். 

அதன்படி ஒவ்வொரு மாவட்டமாக அவர் தொடர்ச்சியாக தனது பாதயாத்திரையை நிகழ்த்தி வருகிறார். இதற்கிடையில், தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தினுடைய பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் தங்களுடைய கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியான அதிமுக மீது பல விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டே இருந்தார். 

கிராமசபைக் கூட்டத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அமைச்சரை அதிரவைத்த முதியவர்

இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக பரபரப்பு அறிக்கை ஒன்றை அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் தான் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த மூத்த அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று அவரது அலுவலகத்தில் டெல்லிக்கு சென்று சந்தித்து பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை. 

 

இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் தொழில் துறை முன்னேற்றங்கள் குறித்த சில கோரிக்கைகளை அவரிடம் வைத்ததாக அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் அதிமுக உடனான கூட்டணி முடிவு குறித்தும் இந்த சந்திப்பின்போது உரையாடப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

“நான் அமைச்சர் ஆனதுக்கு துர்கா ஸ்டாலின் தான் காரணம்..” உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் மெய்யநாதன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios