Tamilisai soundararajan Criticizes CM Stalin: திமுக எம்பி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்ற சென்னை, அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் தொகுதி மறுவரை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என தமிழிசை கூறியுள்ளார். 

இதையும் படிங்க: கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடுமோ என்ற பயமா? திமுகவை விளாசும் தமிழிசை!

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்கள் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும் அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். முதல்வர் அவர்களே முதலில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அவரவர்களின் பாராளுமன்ற தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள் ஓட்டளித்த மக்களுக்கு. நன்றி கூட சொல்ல அவர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை. 

திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை அவர்களை நீங்கள் மற்ற மாநில முதல்வர்களை சந்திக்க சொல்கிறீர்கள் முதலில் வாக்களித்த பாராளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள் பின்பு மற்ற மாநில மக்களை சந்திக்கலாம் முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்க பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம். தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க. இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.

இதையும் படிங்க: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? 3 முக்கிய தீர்மானங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி சரவெடி!

மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொகுதி வரையறையில் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும். அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.