பெண்கள் குளிக்கும்போது ஆபாச படம் எடுத்த் தமிழ் வாத்தி!

நெல்லை மாவட்டம் பணகுடி பாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர், அருகிலுள்ள ரோஸ்மியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பைக்கில் பள்ளிக்கு செல்லும்போது கால்வாயில்  பெண்கள் குளித்துக் கொண்டிருந்ததை அந்தோணிசாமி செல்போனில் படம் எடுத்துள்ளார். 

இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ்  தட்டிக்கேட்டுள்ளார். அவரை ஆபாசமாக திட்டி அந்தோணிசாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் அந்தோணிசாமியை கைது செய்தனர்.

துப்பாக்கியுடன் செல்பி எடுத்தபோது குண்டு பாய்ந்து வாலிபர் பலி!

உத்தரபிரதேச மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் பரிசாந்த் சவுகான் (வயது 23). இவர் டெல்லியின் ஷதாரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது சரிதா விகாரில் உள்ள தனது மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார். 

அவரது மாமா மகன் 11ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் பேசிக்கொண்டிருந்த சவுகான், செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று தனது தந்தையின் துப்பாக்கியை நைசாக எடுத்து வந்து செல்பி போஸ் கொடுத்துள்ளான். 

அப்போது எதிர்பாராதவிதமாக அவனது கை துப்பாக்கி விசையில் பட, தோட்டா சீறிப் பாய்ந்து சவுகானை தாக்கியது. இதில் நிலைகுலைந்து விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். 

சிறுவன் வைத்திருந்த துப்பாக்கியின் உரிமம் அவனது தந்தை பிரமோத் சவுகான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் இல்லை.  இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரூ.1,000க்கு சிறுமி விற்ற பெரியப்பா!

கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் பவித்ரா. இவரது பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பவித்ரா ஆதரவின்றி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பவித்ராவின் பெரியப்பா ரூ.1,000க்கு ஆசைப்பட்டு பவித்ராவை சென்னையில் உள்ள ஒருவரது வீட்டில் சமையல் வேலைக்கு விற்று சென்றார். அங்கு அந்த சிறுமியை அவர்கள் மிகவும் கொடுமை படுத்தியதால், அந்த சிறுமி அங்கிருந்து ஓடிவந்து கும்பகோணம் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார்.

ஆனால் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். இதைப்பார்த்த ரயில்வே போலீசார் அந்த சிறுமியை அழைத்து விசாரித்த போது நடந்ததை கூறினார். உடனே அந்த சிறுமியை போலீசார் மீட்டு அயனாவரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.