சீன அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் இரண்டாவது முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருது பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவை கலக்கும் தமிழன்..!
சீன அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் இரண்டாவது முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருது பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் கிருஷ்ண பாளையத்தை சேர்ந்தவர் தேவகுமார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சீனாவில் ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். சிறந்த முறையில் மிக எளிதாக பாடம் எடுக்கும் இவரது திறமையை பாராட்டி கடந்த 2016 ஆம் ஆண்டே சீன அரசிடம் இருந்து சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்றார்.
இந்நிலையில் மீண்டும், இரண்டாவது முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து உள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஐசக் -சரோஜா தம்பதிகளின் மகனான இவர், சீன அரசிடமிருந்து உயரிய விருதை பெற்றதை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மாணவர்களின் சிந்தனைத் திறனையும், தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்களை சிறப்பாக மாணவர்களுக்கு எடுத்து வருகிறார் தேவகுமார். மேலும், இந்திய மாணவர்களுக்கு இந்த வேத கணித முறையில் கணக்கு பாடம் நடத்தினால் அதிக மதிப்பெண்கள் எடுக்க வழி பிறக்கும் என்று சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு தனி மனிதனாக சீனாவில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவரது திறமை உலக அளவில் போற்றப்பட்டு வந்தாலும், அவர் ஒரு இந்தியர் என்பதிலும், அதுவும் தமிழகத்தில் சேர்ந்தவர் என்பதிலும் பெருமை கொள்கின்றனர் மக்கள்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 19, 2019, 7:57 PM IST