Tamil stunt masters brother in law gun fired by Tamil police during the protest
இன்று நடை பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், 11க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள், காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சுத்தமான காற்றை சுவாசிக்கவும், தூய்மையான நீரையும் பருகவும் ஆசைப்பட்டதா எங்கள் மக்கள் செய்த தவறு?
தங்கள் அடிப்படை தேவையை பாதுகாக்க போராடிய மக்களுக்கு, அரசாங்கம் செய்திருக்கும் இந்த அநியாயம் மிகவும் கண்டிக்கத்தக்கது. என கொதித்தெழுந்திருக்கின்றனர் தமிழக மக்கள்.
திரைத்துறையில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டரான சில்வாவின் தங்கை கணவரும், இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தி போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருக்கிறார். இந்த சம்பவத்தால் அவரது குடும்பம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.
எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .மிக்க வேதனையோடு பகிர்கிறேன் 😭 pic.twitter.com/4QNYJfcKwW
— silva stunt (@silvastunt) May 22, 2018
இது குறித்து மனவருத்ததுடன் சில்வா வெளியிட்டிருக்கும் பதிவில் ”எனது அன்புத் தங்கையின் கணவர், ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ், ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .மிக்க வேதனையோடு பகிர்கிறேன்” என தெரிவித்து வருந்தியிருக்கிறார். அவருக்கு மக்கள் தங்கள் ஆறுதலை பகிந்துவருகின்றனர்.
