"தமிழ் மக்கள் இனி அந்த தவறை செய்யப்போவதில்லை" - என் மண் என் மக்கள் யாத்திரை - அனல் பறக்க பேசிய அண்ணாமலை!
En Mann En Makkal : கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் "என் மண் என் மக்கள்" என்ற யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் துவங்கினார்.
சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற "என் மண் என் மக்கள்" யாத்திரையை இன்று திருப்பூரில் கொடி காத்த குமரனின் சிலைக்கு மாலை அணிவித்து முடித்திருக்கிறார் தமிழக மாநில பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள். கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் எடுத்துரைக்க இந்த யாத்திரையை அவர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று பல்லடத்தில் நடைபெற்ற விழாவில் யாத்திரை நிறைவு பெறுகிறது. இந்த முக்கிய நிகழ்வில் பாரத பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்வில் பேசிய தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள், இன்னும் 60 நாள்களில், 400 இடங்களுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமைக்க உள்ளார்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி 39 எம்பிக்களை அமர்த்தி அழகு பார்க்கும் என்று சூலரைத்தார். அதுவரை நமக்கு ஓய்வெடுப்பது கிடையாது, பத்து ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கும் பொழுது தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் நிகழ்ந்ததாகவே சரித்திரம் இருக்கும் என்றார் பெருமையோடு பேசினார்.
கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் செய்த தவறை தமிழக மக்கள் இனியும் செய்யப்போவதில்லை என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி அவர்கள், அண்ணாமலை அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.