சென்னைக்கு மிக கன மழைக்கான எச்சரிக்கையா.? எந்த, எந்த மாவட்டங்களில் இன்று கன மழை- வெதர் மேன் அப்டேட் என்ன.?

தமிழகத்தில் வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லையென்றாலும் கன மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீர் ஜான் தெரிவித்துள்ளார்.
 

Tamil Nadu Weatherman has informed that there is a possibility of heavy rain in Chennai KAK

டெல்டாவில் கொட்டித்தீர்த்த கன மழை

வட கிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வானிலை நிலவரம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர் மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையின் தெற்கே மகாபலிபுரம் பகுதிகள் வரை மழை மேகங்கள் உள்ளது.  டெல்டா முதல் செங்கல்பட்டு வரை கனமழை பெய்து வருகிறது. டெல்டாவின் சில பகுதிகளில் 200 மிமீ தீவிர மழை பெய்துள்ளது. 

சென்னையில் மிக கன மழை எச்சரிக்கையா.?

அதே நேரத்தில் சென்னையில் மிகக் கனமழை பெய்வதற்கான வாய்ப்பில்லை. சென்னையை பொறுத்தவரை நேற்றைய தினம் போல் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேகக்கூட்டங்கள்  டெல்டா முதல் புதுச்சேரி வரை உள்ளது. விழுப்புரம், புதுச்சேரி முதல் திருவண்ணாமலை வரையிலான பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும். தென் சென்னை புறநகர் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை கனமழையின் தாக்கம் இருக்கும். டெல்டாவில் இருந்து மேகங்கள் நகர்ந்து விழுப்புரம் மாவட்டங்கள் முழுவதும் சூழ்ந்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் இது செங்கல்பட்டு மற்றும் தென் சென்னை புறநகர் பகுதிகளுக்கு சிறிது சிறிதாக பரவ கூடும். 

Tamil Nadu Weatherman has informed that there is a possibility of heavy rain in Chennai KAK

திருவாரூரில் 20செ.மீட்டர் மழை

சென்னைக்கு மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லாமல் போகலாம். இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சாதாரண சமாளிக்கக்கூடிய கனமழையைப் பெறும். இந்த நிலையில்,  திருவாரூர் மற்றும் சீர்காழியில் 200 மிமீ மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்தில் சுமார் 150-200 மிமீ மழை,  செங்கல்பட்டு மகாபலிபுரத்தில் 120 மி.மீ மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கன மழை.. பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios