குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு
வரும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு சார்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு சார்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி இந்தியக் குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெறும்.
மாநில அரசுகள் இந்த அலங்கார ஊர்திகளைத் தயாரித்து அணிவகுப்பில் பங்கேற்பது வழக்கம். இதன்படி, 2025ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற 15 மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சும்மா இருந்தே மாதம் 72,000 சம்பாதிக்கலாம்! வரியில்லா வருமானம் தரும் திட்டம்!
அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இல்லை. இதன் மூலம் தமிழகத்தின் அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அனுமதி பெற்றுவிட்டன.
விழா நடைபெறும் இடமான டெல்லியிலேயே அந்த மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு குடியரசு தின அணிவகுப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால், அனுமதி கிடைக்காத மாநில அரசுகள் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்துள்ளன. பாஜக பழிவாங்கும் அரசியல் செய்வதாக டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.
டெல்லி அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்படுவது முதல் முறை அல்ல. தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக டெல்லி அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதேபோல தமிழ்நாடு அரசின் ஊர்திக்கும் கடந்த காலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
வெள்ளை தங்கம் என்றால் என்ன? அதன் விலை எவ்வளவு? முழு விவரம் இதோ!