வெள்ளை தங்கம் என்றால் என்ன? அதன் விலை எவ்வளவு? முழு விவரம் இதோ!
தங்கம் என்றாலே மஞ்சள் நிறம்தான் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளை நிறத்திலும் தங்கம் உள்ளது. வெள்ளை தங்கம் பிளாட்டினத்திற்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. இது 75% தங்கம், 25% நிக்கல் மற்றும் துத்தநாகத்தால் ஆனது.
White Gold vs Yellow Gold
தங்கத்தை விரும்பாதவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். குறிப்பாக இந்தியாவில், எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் தங்கம் இல்லாமல் முழுமையடையாது. தங்கம் என்றாலே பளபளப்பான மஞ்சள் உலோகம் தான் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளை தங்கம் பற்றிப் பலருக்கும் தெரியாது. தனித்துவமான நிறத்தைக் கொண்ட இந்தத் தங்கம் பற்றி இத்தொகுப்பில் அறியலாம்.
What is White Gold?

பொதுவாக, தங்கம் கௌரவத்தின் அடையாளமாக இருக்கிறது. ஒருவரிடம் இருக்கும் தங்கத்தின் அளவு, அவர்களின் சமூக அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது. தங்கத்தின் தரம் மற்றும் மதிப்பு காரட் எடையின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. ஆனால், தங்கத்தின் மற்றொரு வடிவமும் உள்ளது. அதுதான் வெள்ளைத் தங்கம். இந்தத் தங்கம் வெள்ளி போன்ற நிறத்தில் இருக்கும்.
White Gold Composition
வெள்ளை தங்கம் பிளாட்டினத்திற்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. 75% தங்கம் மற்றும் 25% நிக்கல் மற்றும் துத்தநாகத்தால் ஆனதுதான் வெள்ளைத் தங்கம். இது 14-காரட் மற்றும் 18-காரட் தரங்களில் கிடைக்கிறது.
White Gold Price
வெள்ளை தங்கம் வலிமை மற்றும் நீண்ட ஆயுள் கொண்டது. மேலும், வெள்ளை தங்கம் பிளாட்டினத்தை விட செலவு குறைந்ததாகவும் இருக்கும். இது மஞ்சள் தங்கத்தை விட உறுதியானது. ஆனால், அடிக்கடி பாலிஷ் செய்வது அவசியம்.
White Gold vs Platinum
விலையைப் பொறுத்தவரை, வெள்ளை தங்கம் வழக்கமான மஞ்சள் தங்கத்தை விட விலை உயர்ந்ததுதான். வெள்ளைத் தங்கத்தை உருவாக்குவதில் உள்ள சிக்கலான செயல்முறைகள் காரணமாக இதன் விலை அதிகமாக இருக்கிறது. வெள்ளைத் தங்கத்தின் உற்பத்திக்கு ரோடியம் என்ற மற்றொரு மதிப்புமிக்க உலோகம் தேவைப்படுகிறது. இது அதன் பளபளப்பை அதிகரிக்க பயன்படுகிறது.