Liquor Price Increase : தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி தமிழகத்தில் மதுபானங்களின் விலை அதிகரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக டாஸ்மாக் நிர்வாகம் இன்று ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டு எண் 189ன்படி மதுபானங்களில் விலை உயரும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அந்த அறிக்கையில் மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு, அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது வருகின்ற பிப்ரவரி மாதம் 1ம் (01.02.204) தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
எனவே 180 மில்லி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூபாய் 10 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல 180 மில்லி அளவு கொண்ட உயர்தர மதுபானங்களின் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஆட்டோ கட்டணத்தை மறுசீரமைக்க பரிசீலனை.!போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட முக்கிய தகவல்
மேலும் 650 மில்லி அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூபாய் 10 உயர்த்தப்பட்டுள்ளது, இந்த மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மில்லி, 750 மில்லி மற்றும் 1000 மில்லி கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மில்லி 500 மில்லி கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கு மற்றும் கொள்ளளவுக்கு ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வருகின்ற வியாழக்கிழமை பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த புதிய விலை பட்டியல் அமலுக்கு வரும். தமிழகம் முழுவதும் 5,300க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது, அதில் 30,000திற்கும் அதிகமான நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.
