தமிழக மக்கள் கவனத்திற்கு.. நவம்பரில் இந்த இரு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது - ஏன்? முழு விவரம் இதோ!

Ration Shop Leave : தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரேஷன் கடைகளின் வேலை நாட்களை ஈடுகெட்ட, இந்த நவம்பரில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தற்பொழுது வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Ration Shop remains closed on these two days full details ans

தீபாவளி திருநாள் நெருங்கி வரும் இந்த நேரத்தில் தமிழகத்தில் மக்கள் தடையின்றி ரேஷன் பொருள்களை பெற சில முடிவுகளை மேற்கொண்டது தமிழக அரசு. இதன்படி ரேஷன் கடைகள் நவம்பர் மூன்றாம் தேதி விடுமுறை இல்லாமல் செயல்படும் என்றும். அதேபோல நாளை நவம்பர் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை இன்றி செயல்படும் என்று அறிவித்தது. 

மேலும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதனால் திங்கட்கிழமையையும் அரசு விடுமுறையாக அறிவித்து அண்மையில் அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள்  வேலை செய்த இரு நாட்களை ஈடு கட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வருகின்ற நவம்பர் 13-ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி ஆகிய இரு நாட்களும் மூடி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

வருகிற நவம்பர் 13ஆம் தேதி திங்கள்கிழமையும் நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்காது. மேலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைத்திட வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் கடையில் உள்ள இருப்பை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

TTF வாசன் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணம்.. முடிந்தால் என்னோடு ரேஸுக்கு வரச்சொல்லுங்கள் - சவால் விட்ட அலிஷா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios