சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகரமே இருள்சூழ்ந்து காணப்பட்ட நிலையில், தற்போது கடும் மழை பெய்து வருகிறது.

 

தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது ஆங்காங்கு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில் மேலும் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்... குறிப்பாக வரும் 7 ஆம் தேதி 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி தலைமையில் இன்றும் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆட்ர.பி. உதயகுமார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

அப்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட குறிப்பிட்ட நாளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் (depression), பின்னர் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறி ஓமன் கடற்கரை பகுதியை அடையும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்து தெளிவாக காணப்பட்டிருந்த வானம், மதியத்துக்குப் பிறகு, மேகமூட்டமாக காணப்பட்டது. சென்னை மாநகரமே இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனை அடுத்து, சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.