மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்.. கலந்தாய்வு குறித்து முக்கிய தகவல்..
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி ஆகும்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி ஆகும். தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் மற்றும் நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
மேலும் படிக்க:Viral Video : திருச்சியில் ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண்! - தக்க சமயத்தில் காப்பாற்றிய காவலர்!
நீட் தேர்வில் தகுதிப் பெற்ற மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 7 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. மருத்துவ கலந்தாய்வு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநரகம் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
இந்த ஆண்டு கலந்தாய்வில், புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்ததும், சம்பந்தப்பட்ட மாணவர் அந்த இடத்துக்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவிடம் செலுத்திவிட வேண்டும்.
மேலும் படிக்க:தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி . சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாணவர், சேர்க்கை கடிதத்தை மட்டும் கொண்டு சென்றால் போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாகவும், மாணவர்களின் நலன் கருதியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.