தமிழகம்.. 7ம் தேதி வரை மழை இருக்கு.. மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Tamil Nadu Rains : தமிழகத்தில் நாளையும், ஜூன் மாதம் 7ம் தேதி வரையும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஜூன் 3ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளிலும், மத்திய கிழக்கு வங்க கடலின் சில பகுதிகளிலும் 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல திருச்சி, தஞ்சை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மிதமான மலை பெய்தது.
அதே போல ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை ஜூன் நான்காம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரை தெற்கு மற்றும் வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று வீச அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
AIADMK: வயிறு எரிகிறது; கருத்து கணிப்பு வெளியீடுகளால் கடுமையான அப்செட் மோடில் ஆர்.பி.உதயகுமார்
கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும் இந்த சூறைக்காற்று வீச வாய்ப்புகள் இருப்பதாகவும். 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இந்த காற்று வீசப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லும் பொழுது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.