மாணவர்கள் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து அனைத்தையும் நமது கைகளின் கொண்டு வந்து சேர்க்கிறது. மனித சமுதாயத்துக்கு காலம் கொடுத்த 2வது நெருப்பு தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
சென்னை நந்தம்பாக்கத்தில் முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் ''உலகம் உங்கள் கையில்'' என்னும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''எதிர்காலம் மாணவர்களின் கையில் உள்ளது. மாணவர்கள் வளர்ந்தால் மாநிலம் வளரும். நாடும் வளரும். இலவச மடிக்கணினி திட்டம் செலவுத் திட்டம் இல்லை. முதலீடு.
தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு அப்டேட் ஆக வேண்டும்
திராவிட இயக்கம் அறிவு இயக்கம். இனி வரக்கூடிய காலம் கம்ப்யூட்டர் காலம் என்பதை அறிந்தவர் கலைஞர் கருணாநிதி. இதை அறிந்து தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கினார். போலி பெருமைகளை பேசி தமிழர்கள் தேங்கி விட மாட்டோம். மாணவர்கள் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து அனைத்தையும் நமது கைகளின் கொண்டு வந்து சேர்க்கிறது. மனித சமுதாயத்துக்கு காலம் கொடுத்த 2வது நெருப்பு தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்
இந்த வளர்ச்சியை குறை சொல்வது முட்டாள்களின் வேலை. செயற்கை நுண்ணறிவால் மனித இடத்தை நிரப்ப முடியாது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அனைத்திலும் நல்லது கெட்டது உண்டு. இதில் நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்? எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்துக்கும் திராவிட மாடல் அரசு திட்டங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது'' என்று தெரிவித்தார்.


